ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது. சந்திப்பின் விசேட நினைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சிறப்பு பரிசொன்றை வழங்கினார். 

19 ஆவது நூற்றாண்டுக்குரிய கண்டி யுகத்தின் அரச வாள் விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதியிற்கு வழங்கப்பட்டது. 1906 ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த வாள் பிரித்தானியாவில் நடைபெற்ற Sotheby எனப்படும் புராதனப் பொருட்கள் ஏல விற்பனையில் ரஷ்யாவினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. 

இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடையாளமாக இந்த புராதன வாள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இலங்கை ஜனாதிபதியிற்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.