எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்டனை பிணையில் விடுதலை செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போது குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்டன் கடந்த வருடம் ஜுன் மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.