(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான  காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எம்மிடத்தில் இல்லை என  ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான கஜந்த கருணாதிலக்க சபையில் அறிவித்தார்.

அதேநேரம் இக்காலப்பகுதியில் அரச பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்து ஏனைய படைகளில் 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று  வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 

1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் பிரிவினைவாதப் பயங்கரவாதம் காரணமாக மரணமடைந்த மற்றும் காயமடைந்த சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட இராணுவ அங்கத்தவர்களின் எண்ணிக்கை, பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, பொதுமக்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பினார்.

பதிலளிப்பதற்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் இல்லாத நிலையில் ஆளும் கட்சி பிரதம கொறாடா கயந்த கருணாதிலக்க பதிலை வழங்கினார்.