ஆசிர்வதிக்கும் சந்திப்பின் போது, போப் ஆண்டவரின் தலையில் அணியப்பட்டிருந்த தொப்பியை, சிறுமி ஒருவர் கழட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் வத்திக்கானில் இடம்பெற்றதுள்ளது.

உலக கத்தோலிக்க மதத் தலைவராக போற்றப்படும், போப் பிரான்ஸிஸ் ஒவ்வொரு வாரமும் பக்தர்களை ஆசிர்வதித்து வருவார், இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஒருவரை அரவணைத்து ஆசிர்வதிக்க முனைகையில், குறித்த சிறுமி போப்பின் தொப்பியை கழற்றி அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் புன்னகைத்த வாரே, தனது தொப்பியை மீளப்பெற்று, சரிசெய்துகொண்டு, தனது ஆசிர்வதிக்கும் பணியை தொடர்ந்தமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.