நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசை அமைப்பதற்கு அர்ப்பணிப்பு செய்த கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

தற்போதைய ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.