வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதல் : 7 பேர் அதிரடியாக கைது

Published By: MD.Lucias

23 Mar, 2017 | 03:39 PM
image

லண்டனில் இடம்பெற்ற தீவிரவாத துப்பாக்கிச்சூடு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் அமைந்நதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் தீவிரவாதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 40க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களின் 3 பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரின் ஆறு பேரின் முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையோரம் பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது.

நேற்று இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த  போது, பாராளுமன்றத்தையொட்டி காணப்படும் தேம்ஸ் நதியின் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் நபர் வேகமாக காரை செலுத்தி வந்துள்ளார்.

 இந்த பாலத்தின் மக்கள் கூட்டமாக அதிகமாக காணப்பட்டதால் கார் பலரின் மீது மோதியுள்ளது.

காரை செலுத்திய நபர் பின்னர் காரிலிருந்து இறங்கி கத்தி ஒன்றுடன் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளான்.

 இதை அவதானித்த  அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் அதிகாரி கெய்தர்பால்மர் குறித்த நபரை தடுப்பதற்காக ஓடியுள்ளார். 

எனினும் தீவிரவாதி கையில் இருந்த ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை குத்தியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த தீவிரவாதி பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்காக ஓடிய போது பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47