சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின், புவி சார் தகவல் திரட்டு செயற்திட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள இலங்கையின் புகைப்படங்கள், விண்வெளி ஆய்வுமையத்தின் இத்தாலிய செயற்பாட்டாளர் இஃனாசியோ மகனணி மூலம் வெளியாகியுள்ளன.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம், கடந்த 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பதிவு செய்துள்ள இலங்கை மற்றும் இந்திய தீபகற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது.

மேலும் புவியின் ஒவ்வொரு பகுதிகளின் தகவல்களை திரட்டுவதற்கு, சர்வதேச விண்வெளிஆய்வுமையம் மேற்கொண்டுள்ள பயணத்தில் பல்வேறு நாடுகளின் புவியியல் அமைப்புகள், பற்றி விண்வெளி ஆய்வு மையம் அவதானிப்பு செயற்பாட்றொன்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.