மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு பிடியாணை பிறப்பித்து கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் போர்ட் மஸ்டேங் கார் தொடர்பிலான தகவலை வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகாத காரணத்தினாலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிமோசடி விசாரணை பிரிவினர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் கார் ஒன்றை கைப்பற்றினர். எனினும் குறித்த கார் மற்றொரு நபரின் பெயரில் வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.