சிறந்த வீரர்களை உருவாக்குவதே மென்செஸ்டர் கால்ப்பந்தாட்ட அக்கடமியின் நோக்கம் ; தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் 

Published By: Priyatharshan

23 Mar, 2017 | 02:55 PM
image

நலிவுற்றுள்ள இலங்கை கால்ப்பந்தாட்டத்தை வளப்படுத்துவதற்கு தலைசிறந்த வீரர்களை உருவாக்கி, தேசிய அணியை வலுப்படுத்துவதே எமது நோக்கமென புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மென்செஸ்டர் கால்பந்தாட்ட அக்கடமியின் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார். 

இதேவேளை, கொழும்பு குதிரைப்பந்தையத்திடலில் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 7 மணிக்கு மென்செஸ்டர் கால்ப்பந்தாட்ட அக்கடமியின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மென்செஸ்டர் கால்ப்பந்தாட்ட அக்கடமியின் செயல்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மென்செஸ்டர் கால்பந்தாட்ட அக்கடமியின் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இன்றைய நாள் எனக்கு மிகவும் சந்தோசமான நாள். எனது சிறுவயது  கனவு நனவாகியுள்ளது. இதை எண்ணி நான் பெருமையடைகின்றேன்.

எமது நாட்டில் கால்பந்தாட்டமானவு மிகவும் நலிவுற்று காணப்படுகின்றது. அத்துடன் கால்பந்தாட்டம் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளது.

பணத்தினால் இவ்வாறானதொன்றை முன்னெடுக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவினை வெளிப்படுத்தும் போதே செயற்படுத்த முடியும்.

நாட்டின் கால்பந்தாட்டத்தை எதிர்காலத்தில் வளப்படுத்துவதற்கு தலைசிறந்து வீரர்களை இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணிக்கு உருவாக்குவதே எமது அக்கடமியின் முக்கிய நோக்கம்.

இந்த அக்கடமியில் 14 கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து இணைந்துள்ளனர். இதில் 8 பேர்  தேசிய பயிற்றுவிப்பாளர்கள் ஆவர். இருந்தபோதிலும் இதில் அங்கம் அனைவரும் ஏ, பி, சீ தரத்திலான பயிற்சியாளர் அனுமதிப்பத்திரங்களை உடையவர்கள்.

கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் வெயில், மழை, இரவு, பகல் பாராது கடின உழைப்பை என்னுடன் இணைந்து செயல்பட்ட ஏனைய பயிசியாளர்களாலேயே இவ்வாறு தூரத்திற்கு வந்துள்ளது.

எமது நாட்டில் கல்பந்து விளையாட்டானது மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. இவ்வாளவு தூரத்திற்கு போனதற்கான காரணம் என்ன. இதனை நாம் எதிர்காலத்தில் மாற்றவேண்டும்.

எமது அக்கடமியில் இருந்து அதிகமான கால்பந்தாட்ட வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய அணிக்குள் உள்ளீர்க்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

குறிப்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாக் கோல் கிண்ணத்தை கைப்பற்றிய  அணியில் இடம்பிடித்த வீரர்களே இன்று மென்செஸ்டர் கால்ப்பந்தாட்ட அக்கடமியில் இணைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மென்செஸ்டர் கால்ப்பந்தாட்ட அக்கடமியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் திறந்து வைக்கப்பட்டதுடன்  கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59