சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு 3 மாத கால பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சவுதி அரேபியாவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ்  சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் இம்மாதம் 29 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் நாடு திரும்புபவர்களுக்கு எவ்வித தண்டனைகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கால எல்லைக்கு பின்னர் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் கடும் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.