ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஷங்கர்

Published By: Devika

23 Mar, 2017 | 12:50 PM
image

ரஜினியை வைத்து எந்திரன் ‘2.0’ இயக்கிவரும் இயக்குனர் ஷங்கர் இன்று (23) சற்று முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

2.0 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்னையில் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று 22ஆம் திகதி படப்பிடிப்புத் தளத்துக்கு வந்திருந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் படக்குழுவைச் சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து பொலிஸில் புகாரளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவசர அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இயக்குனர் ஷங்கர், மேற்படி சம்பவம் குறித்து தான் வருந்துவதாகவும், அதற்காக ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதிருக்க உறுதி கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர், “இரண்டு தசாப்தங்களாக வெற்றி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் எப்போதும் ஊடகவியலாளர்களுக்கு மரியாதை கொடுத்து வருபவர். நிச்சயம் இச்சம்பவம் அவருக்குத் தெரியாமலேயே நடந்திருக்க வேண்டும். என்றாலும், தனது குழுவின் தவறுகளுக்காக எம்மை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18