கண்புரைக்கு நிவாரணமளிக்கும் மருந்து.!

Published By: Robert

23 Mar, 2017 | 12:36 PM
image

அண்மைக் காலத்தில் 40 நெருங்கும் போதே மெல்ல எட்டி பார்க்கத் தொடங்கி விடுகிறது கண்புரை. இலங்கை, இந்தியா உள் ளிட்ட உலகின் பல நாடுகளில், கண்புரை சத்திர சிகிச்சைக்காகப் பல மில்லியன் ரூபா ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. இந்நிலையில் கண்புரைக்கு சத்திர சிகிச்சை ஒன்றுதான் வழி என்றிருந்த நிலைமையை மாற்றி, சொட்டு மருந்தால் கண்புரையைக் கரைக்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. 

கண்ணில் உள்ள லென்ஸின் புரதங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து திரண்டு வெள்ளையாகி அதனால் லென்ஸ், ஒளி ஊடுருவும் தன்மையை இழந்துபோவதைத்தான் ‘கண்புரை’ (Cataract) என்கிறோம். இதனால்தான் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய தற்போது ‘பொலி மீதைல் மீதாகிரைலேட்’ என்ற பிளாஸ்ரிக்கைப் பயன்படுத்தி ‘விழி உள் லென்ஸை’ (Intra Ocular Lens) தயாரித்துக் கண்ணுக்குள் வெற்றிகரமாகப் பொருத்தி, சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ‘லேனாஸ்டெரால்’ என்ற சொட்டு மருந்து கண்புரைக்கு மூல காரணமாகத்திகழும் புர தங்களைக் கரைத்துவிடுகிறதாம். அதிலும் பக்க விளைவு ஏதுமில்லாமல் கரைவதால் இதன் மீது மருத்துவ நிபுணர்கள் தங்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். அதனால், கண் புரைக்கு சத்திர சிகிச்சை இனித் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

தொடக்கத்திலேயே அதாவது கண்புரை ஏற்படக்கூடும் என்பதை முன்பே பரிசோதனைகள் மூலம் உறுதியாகத் தெரியத் தொடங்கினால் இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம், கண்புரை ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும் என்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கண் பிரச்சினைகளுக்கு சாதாரண சொட்டு மருந்து மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதோ, அதேப் போன்றே கண்புரைக்கும் சொட்டு மருந்து மூலம் சிகிச்சை எடுத்து குணமடையலாம். 

டொக்டர் அமர் அகர்வால், கண் மருத்துவநிபுணர்

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36