நடிகர், பாடகர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், வசனக்கர்த்தா என பன்முகத் திறமை பெற்றவர் நடிகர் தனுஷ். இவர் ப.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று இன்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, படக்குழுவினர் அனைவரும் பங்குபற்றியிருந்தனர். ராஜ்கிரண், நடிகை ரேவதி உட்பட பல சீனியர்கள் இவரை வார்த்தைகளால் புகழ்ந்து தள்ள, இறுதியில் பேச வந்தார் தனுஷ்.

இயக்குநராகிவிட்டதாலோ என்னவோ தமிழில் பேசத் தொடங்கி, தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார். நன்றியைக் கூட ஆங்கிலத்தில் சொன்னார். இவரின் இந்த மாற்றம் இவ்விழாவிற்கு வந்திருந்த அவருடைய ரசிகர்களையே ஆச்சரியப்படவைத்தது. 

இறுதியில் ஒருவர் எம்முடைய தலைவர் என்ன சொன்னார்? என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்க, அவரோ உதட்டை பிதுக்கியப்படி கடந்து சென்றார்.

முதல் படத்தை இயக்கி முடித்ததும் தமிழை பேச மறந்த தனுஷ், விரைவில் ஆங்கில படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஒத்திகையாக இருக்கும் என்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

படத்தின் ட்ரைலரைப் பார்க்கும் போது இது மற்றொரு ‘மஞ்சப்பை’யாக இருக்கக்கூடும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். 

தகவல் : சென்னை அலுவலகம்