லிபியாவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்; 47 பேர் உயிரிழப்பு

Published By: Robert

08 Jan, 2016 | 04:14 PM
image

மேற்கு லிபியாவிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட டிரக் வண்டிக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 47 பேர் பலியாகியுள்ளனர்.

ஸலிடன் நகரிலுள்ள அல் ஜஹ்பல் பயிற்சி முகாமை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சி முகாமானது கேணல் கடாபியின் ஆட்சிக் காலத்தில் இராணுவத் தளமொன்றாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதேசமயம் அன்றைய தினம் வட லிபியாவிலுள்ள பிரதான துறைமுக நகரான ரஷ் லனுப்பின் நுழைவாயிலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்படி பலியானவர்களில் 16 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது.

ரஷ் லனுப் நகரின் நுழைவாயிலிலுள்ள சோதனைச்சாவடியின் நுழைவாயிலிலுள்ள சோதனைச்சாவடியருகே வாகனமொன்றைச் செலுத்தி வந்த சாரதியொருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 3 காவலர்களும் உயிரிழந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் கேயல் கடாபி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு லிபியா ஸ்திரத்தன்மையின்மையை எதிர்கொண்டுள்ளது.

அந்நாடு சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் உட்பட இரு அரசாங்கங்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35