பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்தேய கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல் 

Published By: MD.Lucias

23 Mar, 2017 | 04:05 PM
image

நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன்.

பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரே எமது இனத்துக்கான போராட்டத்தை ஆரம்பித்தவன் நான். நான் இன்று கட்டிருக்கும் கடிகாரம் கூட பிரபாகரனால் வழங்கப்பட்டது என ஜெனிவாவில் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்தார்.

 மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது நாட்டில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் 15 வருடங்களுக்கு முதலே அமெரிக்காவில் தெரிவித்தேன். விக்னேஸ்வரன், சம்பந்தன் ஆகியோருக்கு முன்னரே இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேசத்துக்கு பகிரங்கப்படுத்தினேன். இதனை எனது புத்தகங்களிலும் தெரிவித்துள்ளேன்.

69 ஆண்டுகளாக இடம்பெற்ற இன அழிப்பு என்ற கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கையில் இன அழிப்பு நடைபெறவில்லை என நான் எங்கும் தெரிவித்தில்லை. இது தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் பல கடிதங்களை எழுதியுள்ளேன்.

1956 ஆம் ஆண்டு நான் படித்துக்கொண்டிருந்த போது சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னை மல்வானை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் சென்றார்கள்.

1958 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் போரிட்டேன். 

செல்வநாயகம், பிரபாகரன் ஆகியோர் எமது இனத்துக்காக போராடியவர்கள். நான் யேசுவுக்கு பிரமாணிக்கமாக இருக்கின்றவன். என் மீது குற்றம் சுமத்தி கொடும்பாவி எரித்தாலும் நான் இறைவனுக்குள் உண்மையானவனாக இருக்கின்றேன்.

இன்று நான் கட்டிருக்கும் கடிகாரம் கூட பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. பிரபாகரன் இன்று இருந்திருந்தால் எதனை செய்திருப்பார். நீங்கள் தான் நினைக்கின்றீர்கள் பிரபாகரனின் பிள்ளைகள் என்று. தற்போதைய இளைஞர்கள் எதனையும் அறியாது நான் இனத்தை காட்டிக் கொடுத்தவன், எமது இனத்தை கைவிட்டவன் என்று என் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.

நான் யாருக்கு அடிமையாகவோ அல்லது எந்தக் கட்சியையும் சார்ந்தோ இருக்கவில்லை. குறிப்பாக பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரே எனது போராட்டத்தை ஆரம்பித்து விட்டேன்.

இந்த போராட்டத்தை நான் ஒரு கிறிஸ்த்தவன் என்ற ரீதியிலேயே நோக்குகின்றேன். ஒரு மனிதனுக்கு எதிரான அநீதி என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றேன். நான் மரணிக்கும் வரை கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருப்பேன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார். என் மீது குற்றம் சுமத்துபவர்கள் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கட்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11