நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும், இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 20 ஆம் திகதி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 31 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சென்ற சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.