நீதிமன்றுக்கு போதைப் பொருள் கொண்டுவந்த பெண்ணுக்கு ஒருவருட கடூழிய சிறை ; 20 ஆயிரம் ரூபா அபராதம்

Published By: Ponmalar

22 Mar, 2017 | 07:25 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருளினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதுச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒருவருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார தீர்ப்பளித்தார். 

புள்ளே டிலானி பெப்ரேரா எனும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பெண், தான் செய்த குற்றச்சாட்டை ஒப்புக் கொன்ட நிலையிலேயே நீதவான் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த  தீர்ப்பளித்தார்.

 கடந்த மார்ச் 8 ஆம் திகதி,  நீதிமன்றுக்கு வந்த பெண்ணை வாயிலில் வைத்து நீதிமன்ற காவலரான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் யமுனா சோதனைச் செய்த போது அவரிடம் இருந்து  200 மில்லி கிராம் கஞ்சா, 50 மில்லி கிராம் ஹெரோயின் ஆகியன மீட்கப்பட்டன. 

விளக்கமறியலில் உள்ள ஒருவருக்கு கொடுப்பதற்காகவே அந்த போதைப் பொருள் எடுத்து வரப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்தது. 

இந் நிலையில் குறித்த  33 வயதான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலான வழக்கு இன்று மீள விசாரணைக்கு வந்தது.

 இதன் போது தன் மீதான குற்றச்சடடுக்களை குறித்த பெண் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்தே நீதிவான் இரு குற்றச்சடடுக்ளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா  அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், முதல் குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிகமாக மூன்று மாத சிரையும் 2 ஆம் குற்றச்சாட்டுக்கு 6 மாத சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என நீதிவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04