வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கூட்டு எதிரணியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் விமல் வீரவன்சவை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாலிந்த திசாநாயக்க, வீரகுமார திசாநாயக்க, பத்ம உதயசாந்த குணசேகர, ரொஷான் ரணசிங்க, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்துவத்த, சிசிர ஜயகொடி, ரஜ்சித் சொய்சா மற்றும் நிரோஷன் பிரேமரத்ன ஆகியோர் இவ்வாறு வெலிக்டை சிறைச்சாலைக்குச் சென்று விமல் வீரவன்சவை பார்வையிட்டுள்ளனர்.

73 நாட்களாக பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் விமல் வீரவன்ச ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.