(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதரவுடன்  இந்த மனிதகுலத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் துரோகம் செய்யக்கூடாது.  அது மன்னிக்கமுடியாத துரோகமாகும். அதை நாடுகள் செய்யக்கூடாது  என்று  தென்னிந்திய தமிழ்  திரைப்பட இயக்குநர்  வீ. கௌதமன்  ஜெனிவாவில்  தெரிவித்தார்.  

ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தீர்மானமானது  தமிழனாகப் பிறந்த யாராலும்  ஏற்றுக்கொள்ளப்பட  முடியாதது.  அதனை சகித்துக்கொள்ளவே முடியாது  எனவும் அவர் குறிப்பிட்டார்.