இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலைகளை உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச தரம் வாய்ந்தவையாக மாற்றியமைக்கும் நோக்கில், குறித்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவு, தேவையான தகவல் பரிமாற்றம், மிருகங்கள் தொடர்பில் புதிய தகவல்களை பரிமாறிக் கொள்ளல் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரின் தேசிய மிருகக்காட்சிசாலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர்   காமினி ஜயவிக்ரம பெரேராவினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.