தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவண் கல்யாண், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “தெறி' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி, விஜய் நடித்த ‘கத்தி' படத்தின் ரீமேக்கான கைதி எண் “150' என்ற படத்தின் மூலம்  ரீஎன்ட்ரி ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிகருமான பவண் கல்யாண், அஜித் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு  வெளியாகி மெகாஹிட்டான ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். 

தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாசன்  நடித்துள்ளார். வருகிற 24 ஆம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்தை கிஷோர் குமார்  இயக்கியுள்ளார். 

இப்படத்தை தொடர்ந்து பவண் கல்யாண், திரிவிக்ரம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அதேநேரத்தில், அஜித்தின் “வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளார்.

வேதாளம் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து முடித்த பிறகு அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகி சூப்பர்ஹிட்டான “தெறி'  படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.