அலாஸ்காவின்  அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு  விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான்.

இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக் பையொன்றில் எடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

இதற்கு முதல் விமானத்தில் பயணித்த ஒருவர் குறித்த பாம்பினை விட்டுச்சென்றுள்ளதாகவும், அவர் பாம்பினை விமானத்தில் எடுத்து வருவதற்கான அனுமதியை பெற்றிருக்கவில்லையெனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிடிக்கப்பட்ட பாம்பு சுமார் 5 அடி நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பாம்பால் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையென விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.