நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவின் மெய்டுகுரி என்ற மாநிலத்திலே் இரு வேறு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாகவும் இதில் சிக்கியே நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த மாநிலத்தின் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போகோ ஹராம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொர்நோ மாநில பொலிஸ் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.