கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­போது பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக மாவட்­டத்தின் பல்­வேறு இடங்­களில் வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது. இந்த வெள்ள நீரில் வந்த முதலை ஒன்று வீட்டில் உறக்­கத்தில் இருந்த சிறு­மியின் தலையை கௌ­விய போது தந்­தையின் முயற்­சி­யினால் அவர் காப்­பற்­றப்­பட்­டுள்ளார்.


குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,


நேற்று அதி­காலை மூன்று மணி­ய­ளவில் கிளி­நொச்சி ஆனந்­த­புரம் கிழக்கு இரத்­தி­ன­புரம் பாலத்­திற்கு அருகில் வசித்து வரும் கன­லிங்கம் என்­ப­வரின் தற்­கா­லிக வீட்­டினுள் புகுந்த முத­லையே அவ­ரது 14 வயது மக­ளான விதுசா என்­பரின் தலையை கௌ­வி­யுள்­ளது. மகளின் அலறல் ­சத்தம் கேட்டு தந்தை விழித்த போது மகளின் தலை முத­லையின் வாய்க்குள் இருந்­துள்­ளது. பதற்றம் அடைந்த அவர் முத­லை­யுடன் போராடி மகளைப் பிடித்து இழுத்து காப்­பாற்­றி­யுள்ளார். இதில் சிறுமி படு­காயம் அடைந்த நிலையில் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகி­ச்சைக்­காக யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பப்­பட்­டுள்ளார். குறித்த சம்­பவம் இடம்­பெற்ற பகுதி ஒவ்­வொரு வரு­டமும் வெள்ள நீரினால் மூழ்குவதுடன் முதலைகளின் அச்சுறுத்தலும் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.