கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஓரிரு தினங்­களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம் சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

அத்­துடன் ­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்ய முடியும் என்ற கோரிக்­கைக்கு தான் உடன்­­டு­­தா­கவும் அவர்   குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரேரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசியக் கூட்­­மைப்பு யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம்  சிறி­தரன்   கேப்­பா­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பரா­மு­கத்­துடன் அர­சாங்கம் இருக்­கின்­றது என்ற தொனிப்­பட கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

இதன்­போது குறுக்­கீடு செய்த அமைச்சர் சுவா­மி­நாதன்கேப்­பாப்­பு­லவு மக்கள் பிரச்­சினை தொடர்­பாக நான் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிவ­மோகன் எம்.பி. உள்­ளிட்­டோ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இதன்­போது கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஓரிரு தினங்­களில் தீர்வு காண முடியும்   என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து உரை­யாற்­றிய சிவ­ஞானம் சிறி­தரன் எம்.பி. அர­சியல் கைதிகள் நீண்­­கா­­மாக சிறையில் வாடு­­தா­கவும் அவர்­களை விடு­தலை செய்­­தற்­கான நட­­டிக்­கைகள் எடுக்­கப்­­டா­தி­ருப்­­தா­கவும் குறிப்­பிட்டார்.

அச்­­­யத்தில், எழுந்த அமைச்சர் சுவா­மி­நாதன், அர­சியல் கைதிகள் விட­யத்தில் தற்­போது வழக்கு தொட­ரப்­பட்­­வர்கள் மீதான விசா­ரணை நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வரு­கின்­றது. விசா­­ணைகள் நிறை­­டைந்த பின்­னரே இது குறித்து அவ­தானம் செலுத்த முடியும் என்றார்.

இதன்­போது சிறி­தரன் எம்.பி. அவர்­­ளுக்கு பிணை வழங்க முடியுமல்லவா? என வினாத்தொடுத்தார்.

அதன்போது அமைச்சர் சுவாமிநாதன்,; பிணை வழங்கி விடுதலை செய்ய முடியும் என்ற விடயத்தில் உடன்படுகின்றேன் என்றார்.