முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.