கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள அனைத்து மகளிர் பாடசாலைகளுக்கும் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள மகளிர் பாடசாலைகளுக்கு இன்று முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மஹாநாம வித்தியாலயத்தின் மாணவர்களும் பழைய மாணவர்கள் சிலரும் வேறு பாடசாலைகளைச் சேரந்த மாணவர்களும் பொரளை யசோதரா மகளிர் பாடசலைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து பாடசாலை சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சீர்திருத்த பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே கொழும்பு மற்றும் அதனை அண்டிய மகளிர் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.