முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : ஜெனிவாவில் ஆதங்கத்தை வெளியிட்டார் பாயிஸ் அமீர்

Published By: Priyatharshan

22 Mar, 2017 | 10:43 AM
image

இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர் என்று  சட்டத்தரணியும் சிவில் அரசியல் உரிமை தொடர்பான செயற்பாட்டாளருமான பாயிஸ் அமீர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்த இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான உப குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்த நிலைமை மாற வேண்டும். குறிப்பாக இந்த விடயங்களில் முஸ்லிம்களை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகர் ஆலயமும் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் முஸ்லிம் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே பார்க்கின்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திலும் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதையே அவதானிக்கின்றோம். இந் நிலைமையை மாற்ற வேண்டும். இந்த விடயங்களில் முஸ்லிம்கள் உரிய முறையில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் இலங்கையில் சிறுபான்மை மத ரீதியான வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31