கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம்

Published By: Raam

21 Mar, 2017 | 08:02 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் நேற்று ஐந்தாவது  நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் மேற்கொண்டுவரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்றையதினம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மாணவர் அமைப்பு கலந்துகொண்டிருந்தது. அவ்வமைப்பின்  ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கையில்,

சம உரிமை இயக்கத்தினால் மேற்கொண்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக  அனைத்து பல்கலைக்கழகங்கள் மாணவர் அமைப்பைச்சேர்ந்த நாங்கள் இன்றைய தினம் இங்கு கூடியுள்ளோம். இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு பிரதான காரணம் என்றவென்றால், வடக்கில் இளைஞர்களை சிறையிலடைத்து நாட்டில் அரசியல் கைதிகள் இல்லையென மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் தெரிவித்திருந்தது. அத்துடன் விடுதலைப்புலி தலைவர்கள் சிலர் அரசியலுக்கு வந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு சுதந்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இன்றும் இளைஞர், யுவதிகள் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் என்பது அரசியல் பிரச்சினை. அதற்கு அரசாங்கம் , ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறவேண்டும் இருந்தபோதும் இளைஞர் யுவதிகளை எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறையிலடைத்ததன் பின்னர் அரசியல் கைதிகள் யாரும் இல்லையென மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தெரிவித்து வந்தது.

ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, தடைச்சட்டங்கள் எதுவும் கொண்டுவரப்போவதில்லையென  இந்த அரசாங்கம் தெரிவித்து வந்தது.ஆனால் இன்று இந்த அரசாங்கமும் அரசியல் கைதிகள் யாரும் இல்லையென தெரிவிக்கின்றது சிறைச்சாலைகளுக்கு சென்று பார்க்கும் போது அங்கு 15-20 வருடங்களுக்கு மேல் எந்த குற்றமும் இல்லாமல் இளைஞர் யுவதிகள் இருக்கின்றனர் ஆனால் அரசாங்கம் இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருப்பதுதான் பிரச்சினையாகும்.

எனவே அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதில்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு நாடு என்ற வகையில் தமிழ்,முஸ்லிம், சிங்களம் என்ற பேதம் இல்லாமல் ஒன்றுபட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34