மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மது உற்பத்தி தொழிற்சாலை நிர்மாண வேலைகள்  குறித்து செய்திசேகரிப்புக்காசகச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப்பகுதியில் மது உற்பத்திச் தொழிற்சாலையொன்று கட்டப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்திசேகரிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த கும்பலொன்று தம்மை தாக்கமுயன்றதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.