உலக பணக்காரர்கள் பட்டியலில் டிரம்ப் பின்னடைவு..!

Published By: Selva Loges

21 Mar, 2017 | 06:54 PM
image

உலகின் முன்னணி பணக்காரர்கள் யார் என, போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த வருடத்தின் பெறுமதியை விட இவ்வருடம் 220 இடங்கள் சரிவடைந்து, உலகின் 544ஆவது பணக்காரராக இடம்பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

மேலும் போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வருடத்தின் முன்னணி, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலின் படி 86 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துக்களை கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக  முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் 75.6 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுடன்  வாரன் பப்பெட் இடம்பெற்றுள்ளார். 

அத்தோடு குறித்த பட்டியலின் பிரகாரம் உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்திலிருந்து 13 சதவீ தம் அதிகரித்திருப்பதாகவும், அதில் அமெரிக்காவில் 565 மற்றும் சீனாவில் 319 பணக்காரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலக பணக்காரர்களை பொறுத்தமட்டில், முதல் 10 இடங்களை சமூகவலைதள நிறுவுனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். குறிப்பாக அமேசோன் இணைய வர்த்தக நிறுவன தலைவர் ஜெப் பிஸோஸ் மூன்றாமிடமும், பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸக்கர்பெர்க்5ஆவது இடத்திலும், ஆரக்கல் இணை நிறுவனர் லார்ரி எல்லிசன் 7 ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47