ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல்வேறு வைபவங்கள் இடம்பெற்றன.

மாவட்டத்தின் பிரதான மரநடுகை வைபவம் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாhள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

வாவி பூங்கா மற்றும் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

- ஜவ்பர்கான்