பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்

Published By: Priyatharshan

21 Mar, 2017 | 04:00 PM
image

வவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில்  இன்று காலை 8.30 மணியயளவில் பெற்றோர் ஒருவரால் ஆசிரியரொருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


கடந்த 13.03.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப்போட்டியொன்று இடம்பெற்றது.

இவ் விளையாட்டு போட்டியில்  மாணவியொருவர் இளைஞனொருவனுடன் தனிமையில் கதைத்துக் கொண்டுள்ளார்.

இதனை கண்ணுற்ற ஆசிரியர் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குறித்த மாணவியின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த ஆசிரியர் மீண்டும் பெற்றோரை அழைத்து குறித்த மாணவியின் செயற்பாடுகள் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

ஆசரியரின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு சென்ற பெற்றோர் இன்று காலை 8.30 மணியளவில் அதிபரை சந்தித்துள்ளார். இந்நிலையில் அதிபருக்கு அருகே நின்ற குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21