பிரிட்டனை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹெக்கிங், விண்வெளிக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ பல்கலைக்கழகத்தை சேர்ந்த, பிரபல இயற்பியல் விஞ்ஞானியான, 75 வயதாகும் ஸ்டீபன் ஹாக்கிங், வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் மூலம் விண்வெளி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவ்வருடம் இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள கலக்டிக் விண்கலம் மூலம், தான் விண்வெளி செல்வதற்கு ஒரு அறிய வாய்ப்பை வெர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சன் அளித்துள்ளதாக, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குறித்த கலக்டிக் விகாலத்தில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீபன் ஹெக்கிங்கும் விண்வெளியில் பறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் வெர்ஜின் நிறுவன தெரிவித்துள்ளது. 

அத்தோடு விண்வெளி ஆய்வியலை மேற்கொள்ளவேண்டும்ஏற்றதா தனது ஆசையை, ரிச்சர்டு பிரான்சன் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.