முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) பிறப்பித்துள்ளது.

பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்வைத்த மீள் திருத்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீமல் வீரவன்சவை எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.