சொஃப்ட்லொஜிக்கின் Future Automobiles அறிமுகப்படுத்தியுள்ள FORD நம்பிக்கை அங்கத்துவ அட்டை

Published By: Priyatharshan

08 Jan, 2016 | 12:11 PM
image

Softlogic Holdings குழுமத்தின் ஒரு துணை நிறுவனமும், FORD மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிறுவனமுமான Future Automobiles (Pvt) Ltd, அண்மையில் FORD நம்பிக்கை அங்கத்துவ அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள, 3S (விற்பனை, பேணற் சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) முகவராண்மை வசதியைக் கொண்ட நவீன FORD மையத்தில் இடம்பெற்றது. இங்கு ஒரே கூரையின் கீழ் FORD காட்சியறை, விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் அமைந்துள்ளன.  

தற்போதைய மற்றும் புதிய FORD வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த நம்பிக்கை அங்கத்துவ அட்டைத் திட்டம் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுடைய வாகனங்களுக்கான தெரிவு செய்யப்பட்ட உதிரிப்பாகங்களுக்கு விசேட தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாகன பேணற் சேவைகள் மற்றும் விபத்தின் போது திருத்த வேலைகள் போன்ற வசதிகளை உபயோகிக்கும் போது FORD வாடிக்கையாளர்கள் புள்ளிகளை சேகரித்துக் கொள்ள முடியும். இப்புள்ளிகள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் பணமாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்கள் அவற்றை பணமாக்கி, பெறுமதிமிக்க அன்பளிப்பு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதுடன், FORD உதிரிப்பாகங்களுக்கு மேலதிக தள்ளுபடிகளையும் பெற்று அனுபவிக்க முடியும். வாடிக்கையாளர்களின் தொடர்பு முறைமையைப் பொறுத்து நம்பிக்கை அங்கத்துவ அட்டைகள் இலத்திரனியல் அட்டை அல்லது இயல்பான அட்டை வடிவத்தில் கிடைக்கப்பெறுகின்றது.

இத்திட்டம் தொடர்பாக Future Automobiles நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“வாகனத் தொழிற்துறையில் சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழும் ஒரு நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதி என்ற வகையில் இலங்கையில் வளர்ச்சிகண்டு வருகின்ற எமது வாடிக்கையாளர் தளத்துடன் சிறந்த முறையில் இணைப்பைப் பேணுவதற்கு நாம் தொடர்ச்சியாக புதிய மார்க்கங்களை கண்டறிந்து வருகின்றோம். 

பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உண்மையான நன்மைகளை வழங்குவதற்காக இந்த நம்பிக்கை அட்டை அங்கத்துவத் திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவர்கள் தமது FORD வாகனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவம், மற்றும் Future Automobiles இல் எமது அணியுடன் பேணும் இடைத்தொடர்புகள் தொடர்பில் சிறந்த பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

” FORD வாகனங்களுக்கு அதிகரித்து வருகின்ற கேள்வியை ஈடுசெய்வதற்காக நிறுவனம் திட்டமிட்டு வருகின்ற தொழிற்பாட்டு விஸ்தரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளதென அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். “இக்கேள்வி அதிகரிப்பின் காரணமாக முதன்முறையாக கொழும்பிற்கு வெளியில் FORD தனது 3S தொழிற்பாடுகளை நிறுவியுள்ளதுடன், இதன் மூலமாக வெளியிடங்களைச் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு எமது உற்பத்தி மற்றும் சேவை வழங்கல்களை விஸ்தரிக்க முடியும்” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.  

நம்பிக்கை அட்டை அங்கத்துவ திட்டம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த துறைசார் விற்பனைகள் பிரிவின் தலைமை அதிகாரியான கிஹான் விதாரண,

“இந்த நம்பிக்கை அட்டையை எமது வியாபார சந்தைப்படுத்தல் யுக்தியாக நாம் கருதுகின்றோம். வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதன் மூலமாக அவர்கள் மீளவும் கொள்வனவுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நியாயமான விலைகளில் மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்குவதற்கு அவர்கள் எத்தகைய கொள்வனவுகளை மேற்கொள்கின்றனர் என்பதை நாம் கண்காணிக்கவும் எமக்கு உதவுகின்றது. 

FORD மோட்டார் நிறுவனத்தின் மிகச் சிறந்த நடைமுறைத் தரங்களின் கீழ் இந்த நம்பிக்கை அட்டைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்த நம்பிக்கை அட்டையை சொந்தமாக்குவதில் பெருமை கொள்ளும் அளவிற்கு இது சிறப்பாக முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57