இந்தியன் பிரிமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் ஜே.பி.டுமினி அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக இவர் டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஐ.பி.எல். போட்டித்தொடரின் போது டேர்டெவில்ஸ் அணியிக்கு 2 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், டேர்டெவில்ஸ் அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற ஐந்தாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 38 போட்டிகளில் விளையாடி 1015 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் டுமினிக்கு பதிலாக மற்றுமொரு வீரரை களமிறக்க டேர்டெவில்ஸ் அணி முடிவெடுத்துள்ளது.