ஹட்டன் நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் திருட்டுத்தனமாக தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு மீள் நிரப்பிய ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த தொலை தொடர்பு நிலையத்தின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.55  பணியாளர்கள் சில நிமிடங்கள்  வெளியில் சென்றிருந்த வேலையில் அவ்விடத்திற்கு வந்த இளைஞன் ஒருவன் தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு 500 ருபா மீள் நிரப்பிய காணொளி வர்த்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி வி கமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றிரரவு  8 மணியளவில் அதே தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வருகைத்தந்த குறித்த இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார்முன்னெடுத்துவருகின்றனர்