(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த பிரதிநிதி சரத் வீரகேசரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து முன்னாள் எம்.பி. சரத் வீரகேசர ஒரு யுத்த குற்றவாளி என்றும் சுவிஸ் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை பிரதிநிதி மணிவன்னன் பத்மநாதன் தெரிவித்ததையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது. இலங்கை தொடர்பான ஜெனிவா பிரரேணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்பாட்டு பந்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே வலியுறுத்தி இந்த உப குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான நிரஞ்சலா, மற்றும் தர்சா ஜெகதீஸ்வரன் பாதிரியார் செபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.