சுற்றுலா சென்றிருந்த பாடசாலைமாணவர்கள், நீர்விழ்ச்சியில் நீராடியப்பொழுது, திடீரென மரம் விழுந்ததால் 20 மாணவர்கள் பலியாகியுள்ள சோக சம்பவம் கானாவில் இடம்பெற்றதுள்ளது.

கானாவின் பிராங் ஆபோ பிராந்தியத்திலுள்ள, சுற்றுலா தளமான கிண்டம்போ நீர்விழ்ச்சியில் நீராடுவதற்காக, சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் நீரடியபொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்து காரணமாக நீராடிய மாணவர்களில், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் விபத்தில் காயமுற்ற சுமார் 11 பேர்வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.