தரை இறங்கும் போது தீப்பற்றிய விமானத்திலிருந்து 44 பேர் உயிரிழந்திருக்கலாமென, அச்சம் வெளியிட்டுள்ள சம்பவம் தென் சூடானில் இடம்பெற்றுள்ளது.

தென் சூடானின் வாவு விமான நிலையத்தில், தரை இறங்கிய விமானம் ஒன்று, திடீரென தீப்பற்றியதால் விமானத்தின் வால் பகுதி தவிர்த்த அனைத்து பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.

இந்நிலையில் ஜுபா நகரிலிருந்து, வவு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தீப்பற்றியதால், விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதிகள் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை அந்நாட்டு தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளதோடு, விமானத்தில் பயணித்த 44 பயணிகளும் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மேலும் தெ சவுத் சுப்ரீம் எனும் விமானசேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே, இவ்வாறு தீப்பற்றியதாகவும், அத்தோடு விமானத்தில் பயணித்தவர்களில் சுமார் 18 பேர்வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மற்றொரு ஊடகம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.