மதவாச்சி பூனாவை பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனமொன்று இன்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி பூனாவை பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி (கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன) ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.