கண்டி கதிர்காமர் ஆலயத்தின், பசநாயக்க நிலமே வீட்டிலிருந்து இரண்டு யானை தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, வனத்துறை ஜீவராசிகள் பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வரலாற்று சிறப்புமிகு கண்டி கதிர்காமர் தேவாலயத்தின் பசநாயக்க நிலமே, வீட்டிலிருந்து இரண்டு யானை தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. மேலும் குறித்த வழக்கு எதிர் வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.