ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட வான்வழித்தாக்குதல் மூலம், இலங்கை கிரிக்கெட் அணியை தாக்கியதாக சந்தேகிக்கப்பட்டு, தேடப்பட்டுவந்த குவரி யாசீன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் குவரி யாசீன், கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற, இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் தொடர்புபட்டவராக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம், பாகிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் நடத்திய டுரோன் வழி தாக்குதலில், குவரி யாசீன் மற்றும் அவருடன் இணைந்து பயணித்த மூன்றுபேரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.