மரபு இசை நிகழ்ச்சியில் தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்தியிருந்த SLIIT மாணவர்கள்

Published By: MD.Lucias

20 Mar, 2017 | 05:03 PM
image

SLIIT   தனது மரபு இசை நிகழ்ச்சியான “விராமய 2017” ஐ ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களுக்கான ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

SLIITன் கணினி பீடத்தின் மாணவர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விராமய 2017” மரபு இசை, நாட்டியம், நாடகம் மற்றும் பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் மாலைப்பொழுதாக அமைந்திருந்தது. இதில் ஆர்வமுள்ள SLIIT மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் நோக்கம் என்பது கல்வியகத்தினுள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதுன், மாணவர்கள் மத்தியில் ஈடுபாட்டை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வுகளில் கல்வியகத்தில் தற்போது பயிலும் மாணவர்களும், பழைய மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

மாணவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த பேஷல மனோஜ் மற்றும் அவரின் வாத்தியக்குழுவினர் பின்னணி இசையை வழங்கி உதவிகளை வழங்கியிருந்தனர்.

அதிகளவு வரவேற்பைப் பெற்ற உள்நாட்டு இசைக்கலைஞர்களான எட்வர்ட் ஜயக்கொடி, ஜகத் விக்ரமசிங்க, நெலு அதிகாரி ஆகியோரும் இந்;நிகழ்வில் தமது கலையம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து FCSC ன் தலைவர் பவன் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “விராமய 2017” ல் வெளிப்படுத்தப்பட்டிருந்த பரந்தளவு வினைத்திறன்களுக்கு எமக்கு மிகச்சிறந்த கருத்துக்கள் வழங்கப்பட்டிருந்தன. எமது மாணவர்களின் புத்தாக்கத்திறனை வெளிக்கொணர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது என்பது அவர்களுக்கு சிறந்த அனுபவமாக அமைந்திருக்கும். இந்த கண்காட்சி என்பது குழுநிலை செயற்பாடாக அமைந்திருந்ததுடன், உயர் நியமங்களின் பிரகாரம் அமைந்திருந்தது. “விராமய” ஸ்தாபகர் பசன் அகலங்க பத்திரனவின் வழிகாட்டல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58