3000 அகதிகளை மீட்டுள்ள இத்தாலிய கடற்படையினர்..!

Published By: Selva Loges

20 Mar, 2017 | 02:28 PM
image

உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் 3000 லிபிய அகதிகளை, இத்தாலிய கடற்பரப்பிலிருந்து மீட்டுள்ளதாக அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

லிபியாவில் நிலவும் போர்சூழல் மற்றும் வறுமை காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்கு சென்ற சுமார் 3000 லிபியர்களை, இத்தாலிய கடற்படையினர் தடுத்து நிறுத்தி, மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் ஆபிரிக்க மற்றும் ஆசிய பிராந்திய மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்தப்பயணத்தின் போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி  வருவதால் நிகழ்ந்து வரும் உயிர் சேதங்கள் மிக அதிகமாகும்.

இந்நிலையில் சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறு அகதிகளாக சென்றவர்களில் சுமார் 5000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வருடம் இதுவரை, சுமார் 2 இலட்சம் குடியேற்றவாசிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்ட வோரோதமான முறையில் குடியேறியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அத்தோடு எதிர்பாராத விபத்துகளில் சிக்கி கடந்த 9 மாதங்களில் மாத்திரம் சுமார் 3000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு இவ்வாறான ஆபத்தான கடல் பயணங்களின் ஊடாக மத்திய தரைக்கடல் பகுதியில்,  இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 12 ஆயிரம் குடியேற்றவாசிகளை தாம் மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோர பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39