புலத்சிங்கள - இஹல நாரங்கல பாலத்துக்கருகில் களுகங்கையில் மூழ்கியவாறு நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என தெரியவில்லையெனவும், நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.