சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.   

ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும் சலுகையில் அடிப்படையில் முன் பதிவுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமற்ற மலைப்பாம்பின் மூலமான மசாஜ் வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த மசாஜ் முறையில், மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்யப்படுவதோடு, கழுத்திலுள்ள தசைப்பிடிப்புகளை நீக்குவதற்கான சிகிச்சை முறையாகவும் செய்யப்படுவதாக சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் பிராங்க் டோசியன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாண்டி என பெயரிடப்பட்டுள்ள மலைப்பாம்பானது கடந்த 13 வருடங்களாக மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதோடு, மசாஜ்ஜிற்கென தனியா கட்டணங்கள் எதுவும் அறிவிடப்படுபவதில்லை எனவும், அனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மாண்டியின் பராமரிப்பிற்காக நாகொடைகள் அளிப்பதாக அதன் உரிமையாளர் பிராங்க் டோசியன் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த சிகை அலங்கார நிலையத்தில் மலைப்பாம்பு மசாஜை ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்பி செய்கின்றனர். அத்தோடு தனது இரையை வேட்டையாடும் மலைப்பாம்புகள் அதை பிடித்து உடலை நசித்து கொன்று சாப்பிடும். ஆனால் மனிதர்களை கொல்வது மிகவும் அரிது என அந்நாட்டு பாம்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.