பொகவந்தலாவ சிறீபுர பகுதியில் 13வயது மதிக்கதக்க சிறுமி ஒருவரை வீடு ஒன்றில் இருந்து அனாதரவான நிலையில் பொகவந்தலாவ பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 

குறித்த சிறுமியின் தாய் இறந்து பலவருடங்கள் கழிந்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை வேறு ஒரு திருமணம் முடித்து கொண்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், பொகவந்தலாவ சிறீபுர பகுதியில் வீடு ஒன்றில் வேலைக்கு அமர்த்தபட்டிருந்தாக 119 என்ற அவசர அழைப்பின் ஊடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சிறுமி வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி ராமசாமி நிரோசினி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு குறித்த சிறுமி நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- எஸ்.சதீஸ்