சென்.ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரிக்கும் இடையே நடை­பெற்ற வடக்கின் பெரும்போர் என வர்­ணிக்­கப்­படும் கிரிக்கெட் போட்­டியின் ஒருநாள் போட்­டியில் சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி 5 விக்­கட்­டுக்­க­ளினால் அபார வெற்றி பெற்­றுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற இப் போட்­டியில் யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூரி முதலில் துடுப்­பெ­டுத்­தாடி 40 ஓவர்­களில் 101 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. 

மத்­திய கல்­லூரி சார்­பாக ஜெனோசன் (22), தனோபன் (14), ஜெய­தர்சன் (10), மதுசன் (3) ஓட்டங்களைப் பெற்­றுக்­கொண்­டனர்.

பந்து வீச்சில் சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி சார்­பாக பந்­து­வீச்சில் யதுசன் 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். பதி­லுக்கு ஆடிய சென்.ஜோன்ஸ் அணி 28.3 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 102 ஓட்­டங்­களைப் பெற்று வெற்றி பெற்­றது.

சென்.ஜோன்ஸ் அணி சார்பில் துலக்சன் (31), கிசாந்­து ஜன் (13), யதுசன் (13), கபில்­ராஜா (9) ஓட்டங்களைப் பெற்­றுக்­கொண்­டனர்.

போட்­டியின் ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர் யதுசன் தெரிவு செய்யப்பட்டார்.